வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-05-08 05:51:42

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ஒருவர் பலி - 22 பேர் படுகாயம்!

ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் முதல் நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. 

இதனையடுத்து இரண்டாவது முறையும் அங்கு பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த முறை கடலுக்கு அடியில் சுமார் 12 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக இருந்ததால் இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கடுமையான அதிர்வினை உணர்ந்துள்ளனர்.

எனினும் சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் சரிந்து விழுந்தன. 
அந்த இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளார்.
மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts