வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-04-12 06:07:29

ரஷ்யாவில் வெடித்து சிதறியது ஷிவேலுச் எரிமலை!

ரஷ்யாவின் கம்சாட்க் தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. சுமார் 10 கிலோமீற்றர் உயரத்துக்கு சாம்பல் எழும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 15 கிலோமீற்றர் உயரத்துக்கு சாம்பல் வெடிப்புகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக விமான போக்குவரத்துக்கான குறியீடு சிவப்பு எச்சரிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பால் ஏற்பட்டுள்ள சாம்பல் விமான போக்குவரத்தை பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எரிமலையை சுற்றியுள்ள பல கிராமங்களில் சாம்பல் படர்ந்து இருக்கின்றது. 
இதனையடுத்து, பாடசாலைகளை மூட உத்தரவிட்டுள்ள அதிகாரிகள் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts