வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-02-08 06:46:51

தொடரும் துயரம் சம்பவங்கள் - கடும் குளிரிலும் தத்தளிக்கும் துருக்கி மக்கள்.

துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளில் இருந்து தப்பியவர்கள் இன்னும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துருக்கியைச் சுற்றியுள்ள பிராந்தியத்தைப் பாதித்த பயங்கரமான பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து 14 வயது சிறுமி ஒருவரை மீட்க முடிந்தது.

அதே நேரத்தில், கடுமையான குளிர் சிரியா மற்றும் துருக்கியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்தாலும், இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் மக்களின் உயிர்களை காக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இடிபாட்டு எச்சங்களால் மூடப்பட்ட சாலைகள், நிலநடுக்கத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்புகள், வீழ்ச்சியடையும் வெப்பநிலை மற்றும் அசாதாரண வானிலை விளைவுகள் பாதிக்கப்பட்டவர்களை தேடுவதற்கும், மீட்பதற்கும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts