வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-02-08 06:09:00

துருக்கிக்கு உதவியளிக்க 300 படையினருடான குழாம் இலங்கையில் தயார் நிலையில் !

துருக்கியினால் கோரிக்கை விடுக்கப்பட்டால், உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நில அதிர்வு அனர்த்தங்களால், இதுவரையில் 4300 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன், 1000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, துருக்கியில் உள்ள 13 இலங்கையர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதாக அங்குள்ள இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 14 இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்பை  ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts