வெளிநாடு | சமூக வாழ்வு | 2020-02-27 13:43:11

கொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தை சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமானது!!

கொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தையொன்று சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சீனாவின் வுஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 05ஆம் திகதி பெண் குழந்தையொன்று பிறந்தது. குறித்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலமாக கொரோனா பரவியிருந்தமை பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந் நிலையில், சியோசியோ என பெயர் வைக்கப்பட்ட குறித்த குழந்தையை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்தனர். 17 நாட்களின் பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை எதுவிதமான சிகிச்சையும் வழங்கப்படாமல் தானாகவே பூரணமாக குணமாகியுள்ளது.

குறித்த குழந்தைக்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட நிலையில் வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படாமல் குழந்தை குணமான சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts