வெளிநாடு | பொருளாதாரம் | 2019-04-11 23:53:37

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது

எக்குவடோர் (Ecuador) நாட்டில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரித்தானிய பொலிஸார் லண்டனில் இன்று கைது செய்தனர்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இரகசியங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.

பாதுகாப்பு இரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

இதற்கிடையே, ஜூலியன் அசாஞ்சேவுக்கு எக்குவடோர் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்நிலையில், லண்டனில் உள்ள எக்குவடோர் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரித்தானியா பொலிஸார் லண்டனில் இன்று கைது செய்தனர்.

எக்குவடோர் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை இரத்து செய்த நிலையில், அசாஞ்சேவை பிரித்தானிய பொலிஸார் கைது செய்து வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts