கல்வி | கல்வி | 2023-09-05 15:37:40

பெரியநீலாவணை புலவர்மணியில் மூன்று மாணவர்களுக்கு மூன்று பாடங்களிலும் "ஏ"  சித்தி

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியான உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் மூன்று பாடங்களிலும் "ஏ"  தர சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன் இப் பாடசாலையில் இருந்து இம்முறை 9 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பாடசாலையின் அதிபர் ஏ. முஹம்மட் அன்சார் தெரிவித்துள்ளார்.

பி.எப்.நூஸ்பிஹா (3A), என். எப். நசீதா (3A), ஏ.எப். ஹிமா (3A), எம்.ஆர். நதீறா (A2B), எ.ஜி.எப்.நிஷா (3B ), ஏ.கே.எப்.அப்றா (2AC), எஸ்.எஸ்.எம்.எஸ்.பாத்திமா சுஹா (A2C), ஜெ. முகம்மட் அப்றார் (2BC) ஆகிய மாணவர்களே இந்த உயரிய பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு கலை பிரிவை மாத்திரம் கொண்டு IC பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட இப்பாடசாலையின் 4வது தொகுதி மாணவர்களே இவர்களாவர். இம்முறை 20 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி சகல பாடங்களிலும் சித்தி அடைந்து இப்ப பாடசாலை நூறு வீதி சித்தியை பெற்றுள்ளது. கடந்த 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் கல்முனை கல்வி வலயத்தில் பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயம் 100% வீத சித்தியை பெற்று வலயத்தில் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உயரிய பெறுபேற்றை பெறுவதற்கு அர்ப்பணிப்போடு பணியாற்றிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எம். முஹம்மட் நியாஸ், முன்னாள் பிரதி அதிபர் எம்.சி.நசார், தற்போதைய அதிபர் ஏ.முஹம்மட் அன்சார், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்கள் என அனைவருக்கும் பாடசாலை சமூகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts