கல்வி | கல்வி | 2023-07-31 05:52:16

பாடசாலை சமூகத்துக்கான Value education நிகழ்ச்சித்திட்டம்!

நூருல் ஹுதா உமர்

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் டைகோனியா அமைப்பு ஆகியவற்றின் அனுசரனையுடன் value education நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நிகழ்வு கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயத்தை மையப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக் குழாம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பிரதேச மட்ட அதிகாரிகள் ஆகியோருக்கான செயலமர்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம் சைபுதீன் தலைமையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலைகளில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றில் முக்கியமாக மாணவர் வரவு ஒழுங்கீனம் மற்றும் இடைவிலகலை தவிர்ப்பதற்க்கும் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் மேம்படுத்துத்துவதற்க்கும் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் செயற்பாட்டுத்திட்டம் தயாரிக்கப்பட்டு அதனை ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்க்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப்பணிப்பாளரும், கல்முனை வலய உதவிக்கல்வி பணிப்பாளருமான என்.எம். மலீக் விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன் நிகழ்வின் நெறிப்படுத்துனராக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் கலாநிதி அஸ்லம் சஜா கலந்து கொண்டு நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்ததுடன் மேலும் விசேட பேச்சாளராக தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் அதிபர் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பாடசாலை பிரதி மற்றும் உதவி அதிபர்கள்,  பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts