கல்வி | கல்வி | 2023-05-04 06:08:19

கல்முனையில் ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் நிதியத்தினால் இரண்டாவது தடவையாகவும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்தில் பொருளாதர உதவி தேவைப்படும் பாடசாலை மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (unicef)  உதவியுடன் கற்றல் உபகரணங்கள் இரண்டாம் தொகுதி புதன்கிழமை(03) வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச். பௌஸ், எம்.எச். றியாசா, கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.எப்.நஸ்மியா சனூஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.ஏ.மலீக்,  உதவிக் கல்விப் பணிப்பாளர்களான யூ.எல்.எம். சாஜீத், ஏ. அஸ்மா மலிக், ஏ. சஞ்சீவன் மற்றும் ஏ.எல்.எம். ஜஹாங்கீர் ஆசிரிய ஆலோசகர் ஏ. றாஸீக் (முறைசாராக் கல்வி) அத்துடன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts