கல்வி | கல்வி | 2019-07-09 00:30:51

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தில் பற்சிகிச்சை நிலையம் திறந்து வைத்தல்; பிரதம அதிதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் மாணவர்களுடைய சுகாதார சேவையினை மேம்படுத்தும் நோக்கில் பற் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு (08)திங்கள்கிழமை பாடசாலை அதிபர் ஏ.எச் அலி அக்பர் தலைமையில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

மேலும் இந் நிகழ்வின் கெளரவ அதிதிகளாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல் அலாவுத்தீன் அவர்களும், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் அப்துல் ஜலீல், விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.ஏ சத்தார், எம்.எஸ்.நிசார்(ஜேபி), மற்றும் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுஹுனன்,பிராந்திய பற்சிகிச்சை அதிகாரி டாக்டர் எம்.பி அப்துல் வாஜித், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைய பல் வைத்திய அதிகாரி டாக்டர் கே.எம் லத்தீப்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம் ரிஸ்வின், கல்முனை வலய பிரதி பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.ரஹீம்,கல்முனை முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச் ஜாபீர்,கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ வாஹிட், டாக்டர் ஏ.ஏ வாஹிட் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எச்.எல்.ஏ அஸீஸ் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான நெளபர் ஏ பாவா,கே.எம் தெளபீக்,பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts