கலை இலக்கியம் | இலக்கியம் | 2022-01-12 16:26:24

கல்முனையில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு.

(றாசிக் நபாயிஸ்)

2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிந்தனைக்கமைய வெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் மிகவும் சிறப்பான நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்காலப்பகுதியில்  கொரோவிற்கு பின்னர் அத்தொற்று நோய் சம்பந்தமான பல விழிப்புணர்வுகள் இடம் பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கல்முனை நிலைய பொறுப்பதிகாரி காரியாலயத்தின் முன்னால் உள்ள சுவர்களில் தனவந்தர்களின் உதவியுடன் பொதுமக்களையும், பாடசாலை மாணவர்களையும் விழிப்புணர்வூட்டும் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.நெளபர் அவர்களின் வழிகாட்டலில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.முர்சித்தின் பூரண ஒத்துழைப்புடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கொரோனா பற்றிய விழிப்புணர்வுப் படங்களும் நீரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் படங்களும் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts