கலை இலக்கியம் | இலக்கியம் | 2022-01-16 16:19:59

கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் அலிக்கான் எழுதிய "நெஞ்சில் பூத்த நெருப்பு" கவிதை நூல் அறிமுகம்  !

எம்.என்.எம். அப்ராஸ்

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் வெளியீட்டகத்தின் வெளியீடாக வெளிவந்த அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் கலைப்பிரிவின் தலைவர் பல்துறை கலைஞர் சாய்ந்தமருது என்.எம். அலிக்கான் எழுதிய "நெஞ்சில் பூத்த நெருப்பு" கவிதை நூல் அறிமுகம் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல். நூருல் ஹுதா உமரின் தலைமையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் (15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் கலைப்பிரிவின் தலைவர், பல்துறை கலைஞர் சாய்ந்தமருது என்.எம். அலிக்கான் கடந்துவந்த பாதைகள் தொடர்பிலும் வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் அவரது இலக்கிய செயற்பாடுகள் தொடர்பிலும், அவரது ஏனைய துறைசார்ந்த திறமைகள் தொடர்பிலும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரகுமான் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலை தர நிர்ணய பிரிவின் பொறுப்பு வைத்தியர் ஏ.ஆர்.எம். ஹாரீஸ், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்தியர் எம்.எம்.எச். ஹபிலுள் இலாஹி, பொது மக்கள் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்தியர் ஏ.எல்.பாரூக், நிதியுதவியாளர் எஸ்.எல்.எம்.லாபீர், நிர்வாக உத்தியோகத்தர் கே.எல்.எஸ். பஹுஜியா, சிரேஷ்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் என்.எல்.எம். தௌபிக், தாதிய அலுவலர்கள், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீத், இம்போர்ட் மிரர் வலையமைப்பின் முகாமையாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.வை.அமீர், உட்பட பலரும் கலந்து கொண்டதுடன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரகுமானுக்கு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவினால் கௌரவிப்பும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Independence day

Independence day

Flags Counter

Flag Counter

Popular Posts