கல்வி | கல்வி | 2021-12-28 06:34:44

கல்முனை கல்வி வலயத்தில்தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்வு !

(ஹுதா உமர்)

கொழும்பு கல்வி அபிவிருத்தி பேரவையின் 17வது ஆண்டு நிறைவு விழாவும், கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்வும் சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் பேரவையின் தலைவரும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள ஓய்வு பெற்ற பிரதிக்கட்டுப்பாட்டாளருமான டாக்டர் வை.எல். மன்சூரின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்றது.

கல்முனை வலயப்பாடசாலைகளில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் சகலருக்கும் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டிய இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மேலும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாய்ந்தமருது கோட்டக் கல்விப்பணிப்பாளர் என்.எம். அப்துல் மலிக், கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ், யூ.எல்.எம். சாஜித், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை, கல்முனை வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அபிவிருத்தி பேரவை முக்கிய நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts