கல்வி | சமூக வாழ்வு | 2021-12-22 12:50:20

இரண்டாம் மொழி சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு(p)

(பாறுக் ஷிஹான்)

இரண்டாம் மொழி சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(16)  அம்பாறை மாவட்டம் மல்வத்தை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது அம்பாறை,மல்வத்தை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின்அரச உத்தியோகத்தர்கள் 48 பேர் 150 மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறி பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த நிலையில் சான்றிதழ்களை   கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரசன்ன சஞ்சீவ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஜீ.எல்.அ. சாமினி சோமதாசவும்  சிறப்பு அதிதிகளாக திணைக்களத்தின் தலைமை பெரும்போக  உத்தியோகத்தர் ஜ.எல்.ஏ. கார்லிக், நிலையத்தின் விவசாய போதனாசிரியர் எம்.ரி.ஏ.கரீம், சிங்கள பாட நெறியின் வளவாளர் ஏ.எம்.எம்.முஜீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் மொழி சிங்கள பாட நெறியானது அரசகரும மொழிக் கல்வி திணைக்களத்தினால் பாராளுமன்றத்தில் 2007, 26ஆம் இலக்க சட்டத்தின் மூலம்  நிறுவப்பட்ட மொழி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரத்துக்கு அமைய அரச அலுவலகர்களுக்கு நடாத்தப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிக் கற்கை நெறிகள் அரசாங்க சுற்றறிக்கைகளுக்கமைவாக தமிழ் பேசும் அரச அலுவலகர்களுக்கு சிங்கள மொழிப் பாடநெறியும்,சிங்கள மொழி பேசும் அரச அலுவலகர்களுக்கு தமிழ் மொழிப்பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts