கல்வி | கல்வி | 2021-08-16 12:01:29

​​தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் எம்.எம்.பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

​(ஹூதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ்,சர்ஜூன் லாபிர்)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு இன்று (16.08.2021) காலை 10 மணிக்கு கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ்​ அபூபக்கர்​  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தினுடைய உயர் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சபையினரின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்கள் போட்டியின்றி கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். கலை கலாசார பீடத்தின் பழைய மாணவரான பேராசிரியர் எம்.எம். பாஸில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அப்பீடத்தின் பீடாதிபதியாகச் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது - TM News ஊடக வலையமைப்பின் சார்பில் நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts