கல்வி | சமூக வாழ்வு | 2021-05-03 17:39:37

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம்

கடந்தாண்டு நடைபெற்ற கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை நாளை மறுதினம் (5)வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மூன்று இலட்சம் பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன்,இவர்களின் பெறுபேறுகளுக்கு அமைய எதிர்வரும் செப்டம்பர் மாதத்தக்குள் தகுதியானவர்களை பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெறுபேறுகள் வௌியிடப்பட்டு சில நாள்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts