கல்வி | கல்வி | 2021-04-14 15:32:38

பாடசாலையின் வளர்ச்சிக்கு அபிவிருத்திக்குழு பக்கபலமாக செயல்பட வேண்டும் - மருதமுனை ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் அதிபர் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை அல்-ஹிக்மா ஜூனியர் பாடசாலையின்  அபிவிருத்திக் குழுவை தெரிவு செய்தற்கான ஒன்று கூடல் பாடசாலை மண்டபத்தில் அதிபர் எம்.எல்.ஏ.மஹ்றூப் தலைமையில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அதிபர்,

பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தேவையான பௌதீக வளங்களை பாடசாலைக்கு கொண்டு வந்து சேர்பது அபிவிருத்திக் குழுவின் பொறுப்பாகும்.

ஆனால் சில பாடசாலைகளில் அபிவிருத்திப் குழுவில் உள்ளவர்கள் இனி  பாடசாலையின் நிருவாகக் கட்டமைப்பு எமது பொறுப்பாகும் என்று பிழையாக விளங்கிக் கொண்டுள்ளனர்.

அபிவிருத்தி குழுவில் இருப்பவர்கள் பாடசாலைக்கு உதவ வேண்டுமே தவிர  ஆசிரியர்கள் இடமாற்றம், அதிபர் இடமாற்றம் என்று கற்றல் - கற்பித்தல் நிருவாக செயற்பாடுகளுக்கு தடையாக செயற்பட முடியாது. இதற்கு பொறுப்பாக வலயக் கல்வி அலுவலகம் உள்ளது.

பாடசாலைகளின் அபிவிருத்திக் குழு தொடர்பாக புதிய சுற்று நிருபத்தை கல்வி அமைச்சு அனுப்பிவைத்துள்ளது. அதில் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பொறுப்புக்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்றார்.

இதனை தொடர்ந்து பாடசாலையின் புதிய அபிவிருத்திக்குழு செயலாளராக  பி.எம். அறபாத் - அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவு செய்யப்பட்டார்.
உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர் ஏ.எஸ்.எம்.றைஸ் - பிராந்திய விற்பனை முகாமையாளர், ஏ.எல்.எம்.ஷினாஸ் -கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், ஏ.எ. ஜாபிர் - கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts