உள்நாடு | அரசியல் | 2020-06-29 18:16:46

மக்கள் அதிகாரத்தை வழங்கும் முன்னரே மக்களுக்கான சேவையை ஆரம்பித்தார் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் வை.கே. ரஹ்மான்

மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசலை அண்டிய பகுதியில் ஆதரவாளர்களை சந்திப்பதற்காக நேரடியாகச் சென்றபோது குறித்த பகுதியில் நீண்டகாலமாக மழை காலங்களில் நீர் தேங்கி நிற்கும் அவல நிலையை மக்கள் சுட்டிக்காட்டினார்கள்.

பல அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் அவ்வப்போது இந்த விடயத்தை தெரியப்படுத்திய போதும் எவரும் இதனை செய்து தரவில்லை என குறித்த பள்ளிவாசலை அண்மித்த பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வேட்பாளர் ரஹ்மான் தனது சொந்த நிதியிலிருந்து நீர் தேங்கி நிற்கும் குறித்த பகுதியை கொங்கிரீட் தூள் கொண்டு  கனரக வாகனத்தில் உதவியோடு செப்பனிட்டு பொதுமக்கள் பார்வைக்கு பொருத்தமானதாக அபிவிருத்தி செய்து கொடுத்தார் .

வை.கே.ரஹ்மானின் இந்த சேவையை குறித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி பேசியதோடு தற்போது பலரும் தமது  குறித்த வேட்பாளரின் துணிச்சல் மிக்க சேவையையும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வை. கே. ரஹ்மான் அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் கட்சியில்  திகாமடுல்ல மாவட்டத்தில் மயில் சின்னத்தில் ஏழாம் (07) இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts