கல்வி | கல்வி | 2020-09-09 14:43:01

"ஏழ்மை கல்விக்கு தடையல்ல" செயற்திட்டத்தின் மூலம் வெப்பம் அளவிடும் கருவி மற்றும் வறிய மாணவர்களுக்கு காசோலை வழங்கிவைப்பு.

(ஹுதா உமர்)

"ஏழ்மை கல்விக்கு தடையல்ல" எனும் செயற்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்ட நளிர் சமூக நல பௌண்டசனினால் சம்மாந்துறை அஸ் - ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் மாதாந்த கொடுப்பனவை செலுத்த முடியாத மாணவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும், மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலயத்திற்க்கு வெப்பம் அளவிடும் கருவி கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அவுஸ்திராலியாவில் வசிக்கும் நளீர் அபூபக்கரின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற காசோலை மற்றும் வெப்பம் அளவிடும் கருவி கையளிக்கும் இந்நிகழ்வில் நளிர் சமூக நல பௌண்டசனின் தலைவர் எம்.ஏ ரஹீம், சிரேஷ்ட ஆலோசகர் ஏ.நௌபார், பொருளாளர் எம்.சி பயாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சம்மாந்துறை அஸ் - ஸாலிஹாத் அரபுக் கல்லூரி அதிபரிடம் காசோலையையும், மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலய அதிபரிடம் வெப்பம் அளவிடும் கருவியையும் கையளித்தனர்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts