கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2020-09-06 14:08:05

பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் அக்கரைப்பற்றில் அரங்கேறிய வெற்றிக் குளம்பொலி

(ஹுதா உமர்)

தேசிய காங்கிரஸின் சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமக்கு வாக்களித்த வாக்காளர்கள், வெற்றிக்காக உழைத்த கட்சி முக்கியஸ்தர்கள், போராளிகளுக்கு நன்றி தெரிவித்து அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் தேசிய காங்கிரசின் வெற்றிக் குளம்பொலி நிகழ்வு நேற்றிரவு அக்கரைப்பற்று மாநகராட்சி மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கடந்த பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம்.சலீம், சட்டத்தரணி கே.எல். சமீம், தொழிலதிபர் டீ. ரவூப், தொழிலதிபர் எம்.எஸ்.எம். அன்சார்,  நிகழ்ச்சி திட்ட அதிகாரி றிசாத் ஷரிஃப், ஓய்வுபெற்ற விரிவுரையாளர் எஸ்.எல்.எம். பளீல், சித்திலெப்பை ஆய்வுமன்ற தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டதுடன் மேலும் பல தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கடந்த தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை பள்ளிவாசல்கள் சம்மேளனம் பாராட்டி கௌரவித்ததுடன் முஸ்லிங்களின் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts