கட்டுரைகள் | அரசியல் | 2019-11-13 22:09:39

தனிச் சிங்கள வாக்குகளால் கோட்டா வென்றால் வடக்கு-கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களின் நிலை அவ்வளவுதான்

ஊடக பிரிவு

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் கோட்டா வெற்றிபெற்றால் வடக்கு-கிழக்கிற்கு வெளியே இருக்கின்ற முஸ்லிம்களின் நிலை அவ்வளவுதான்.அதிகம் ஆபத்தை எதிர்நோக்கப்போகிறவர்கள் அவர்கள்தான்.

இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.நிந்தவூரில் நேற்று [12.11.2019]இடம்பெற்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறியவை வருமாறு:

எக்காரணம் கொண்டும் இந்தத் தேர்தலில் எமது வாக்களிப்பு குறையவே கூடாது.சஜித்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.மீதமாக இருக்கின்ற நாட்களுக்குள் மிதப்பு வாக்குகள் பல சஜித்தின் பக்கமே திரும்பும்.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் கோட்டா வெற்றிபெற்றால் வடக்கு-கிழக்கிற்கு வெளியே இருக்கின்ற முஸ்லிம்களின் நிலை அவ்வளவுதான்.அதிகம் ஆபத்தை எதிர்நோக்கப்போகிறவர்கள் அவர்கள்தான்.

ஆகவே,எப்படியாவது நாம் கோட்டாவை தோற்கடித்தே ஆகவேண்டும்.இதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.சிறுபான்மை இன மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எவராலும் வெற்றி பெற முடியாது-ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை நாம் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

சஜித் களத்தில் இறங்கியதால் தூங்கிக் கிடந்த  ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் எழும்பிவிட்டார்கள்.ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத்துக்கு வருகின்ற மக்கள் எல்லாம் தானாக வருகின்ற கூட்டம்.ஆனால்,கோட்டாவின் கூட்டத்துக்கு மக்கள் காலி,மாத்தறை போன்ற இடங்களிலில் இருந்து அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

பேருவளையில் நடந்த கோட்டாவின் கூட்டத்துக்கு நீர்கொழும்பில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.மஹியங்கனையில் இடம்பெற்ற கூட்டத்துக்கு வெளி ஊர்களில் இருந்து 150 பஸ்களில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.இதன்மூலம் மக்களை மயக்கப் பார்க்கிறார்கள்.

கோட்டாவுக்கு வாக்குப் போடுமாறு யாராவது உங்களுக்குத் பணம் தந்தால் வாங்குங்கள்.அது உங்களின் பணம்.வாங்கிக்கொண்டு சஜித்துக்கு வாக்குப் போடுங்கள்.

யாருக்கும் விருப்ப வாக்கு கொடுக்க வேண்டாம்.அன்னத்துக்கு மட்டுமே புள்ளடி இடுங்கள்.நீங்களும் வாக்களிப்பதோடு அனைவரையும் வாக்களிக்க வையுங்கள்.அளிக்காமல் இருக்கப்போகின்ற வாக்குகள் எல்லாமே சஜித்துக்கான வாக்குகள்.

எமது பாதுகாப்பை-உரிமையை உறுதி செய்யும் இந்தத் தேர்தலை சரியாகப் பயன்படுத்துங்கள் சஜித்தை வெற்றி பெறச் செய்யுங்கள்-என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts