கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-11-07 19:32:03

மீலாத் தினத்தை முன்னிட்டு மீலாத் கவியரங்கு

எம்.எஸ்.ஆதிக்

அட்டாளைச்சேனை பிரதேச கலாசார பிரவினால் மீலாத் தினத்தை முன்னிட்டு "அண்ணல் நபியின் அவதாரம் அகிலத்தின் பசுமைக்கு ஒரு வரம் " எனும்தொனிப்பொருளிற்கு அமைவாக மீலாத் கவியரங்கு வியாழன் அன்று (7) கலாசார உத்தியோத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப் தலைமையில் அட்டாளைச்சனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இக் கவியரங்கு பாவேந்தல் பாலமுனை பாறுக் தலைமையில் நடைபெற்றது. இக் கவியரங்கில் அட்டாளைச்சேனை , பாலமுனை , ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த இளம் , மூத்த எழுத்தாளர்கள் கலந்து பாவேந்தல் பாலமுனை பாறுக் தலைமையில் கவி பாடினார்கள்.

அம்பாரை மாவட்ட கலாச்சார அபிவிருத்தி உத்தியோத்தர் ரீ.எம். ரின்ஸான், நிருவாக உத்தியோகத்தர் நளில் கிராம சேவை உத்தியோகத்தர் நளீர் அகியோர் கலந்து கொண்டனர்.

கவியரங்கில் கலந்துகொண்டு கவிபாடிய கவிஞர்களுக்கு சான்றிதழ் வழக்கி வைக்கப்பட்டது.


Our Facebook

Popular Posts