கட்டுரைகள் | சமூக வாழ்வு | 2019-10-25 19:13:27

ஈமானியத்தை உரசிப் பார்க்கும் 8வது ஜனாதிபதி தேர்தல்!

பி.எம்.ஷிபான்

1989 ம் ஆண்டு 3வது ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உரையாற்றும் போது; “ இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிங்களை பாதுகாக்கும் வல்லமை ஏக இறைவன் அல்லாஹ்வை தவிர வேறொருவருக்கும் இல்லை” என்பதனை தெட்டத்தெளிவாக கூறியிருந்தார்.

இன்முறைய 8 வது ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மை இனங்களை அடிபணியவைத்து வென்றுவிடலாம் என்ற முனைப்போடு மொட்டு அணியினால் முன்னெடுக்கபடுவதானது வெள்ளிடைமலை. அதற்கான திட்டங்களும் செயற்பாடுகளும் செவ்வெணே வகுக்கப்பட்டு அரங்கேற்றப்படுவதனை நாங்கள் அறியக் கூடியதாய் உள்ளது.

இதற்கு பலிக்கடாவாக சிறுபான்மை தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை ஆக்கிவிட்டும், சிங்கள ஊடகங்களிலே அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அதில் குளிர்காயும் நிலையும் காணப்படுகின்றது.

இதில் ஓர் அங்கமாக இன்றைய நாட்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுவதும் , ஏலவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதும் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதும் நாம் அறியாதவை அல்ல.

மாத்திரமல்லாது, மொட்டின் பிரசார மேடைகளுக்கு முன்னால் காட்சிப்படுத்தப்படும் தேசியக் கொடிகளிலே இந்த நாட்டின் சொத்தான சிறுபான்மை இனங்களை காட்சிப்படுத்தும் நிறங்களை நீக்கிவிட்டுள்ளமையானது அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதைப்போன்றுள்ளது.

இந்த ஈனச்செயல்களுக்காக நமது சமூகத்தில் இருந்தும் கூலிகள் விலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் ஜனநாயகத்துக்கு விரோதமாக தமிழ் முஸ்லிம் வாக்குகளுக்காக எவ்வளவு விலையேனும் கொடுக்கக்கூடிய வல்லமையும் அவர்களிடம் காணப்படுகின்றது. காரணம், மீண்டுமொரு தோல்வியை தாங்கும் சக்தி மொட்டுத் தரப்புக்கு இல்லாமலேயே இருக்கின்றது.

இதற்கு மேலதிகமாகவும் அவர்கள் சிந்தித்து இந்த தேர்தல் காலத்திலே இனங்களுக்குள்ளே முறுகல் நிலையை தோற்றுவிக்கின்ற செயற்பாடுகளையும் அரங்கேற்றக்கூடும். அந்த சூழ்ச்சிகளுக்கு சிக்குறும் சமூகமாக நாம் மாறிவிடக்கூடாது.

ஆகவேதான் முஸ்லிங்களை அஞ்சவைத்து, அடிபணியவைத்து அவர்களின் ஈமானியத்தை உரசிப்பார்க்க நினைக்கும் இந்த தேர்தலிலே முஸ்லிங்கள் அனைவரும் அச்சம் துறந்து அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து வாக்குபலமுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் திரண்டிருக்கின்ற அணியில் நின்று எதிரணியை தோற்கடிக்க நமது வாக்குபலத்தை பயன்படுத்த வேண்டு


Related Posts

Our Facebook

Popular Posts