கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-10-06 10:48:27

அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழா

அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய வெய்யில் மனிதர்கள் (மொழிபெயர்ப்பு நாவல்), எனக்குள் நகரும் நதி(பத்தியெழுத்துத் தொகுதி)ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (04-10-2019) ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மண்டபத்தில் ஓய்வு நிலை கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக விவசாய, நிர்ப்பாசண,கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்
பல உள்ளூர் வெளியூர், அரசியல்,இலக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வில்.
நூல் நயவுரைகளை கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்செய்க் எம்.ரி.எம்.றிஸ்வி அவர்களும், அக்கரைப்பற்று கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனீபா இஸ்மயில் அவர்களும் நிகழ்த்தியதோடு உலக கவிஞர்  முஹம்மட் அதீக் சோலைக்கிழி சிறப்புரையையும் நிகழ்தினார்கள்.
 


Our Facebook

Popular Posts