கலை இலக்கியம் | கல்வி | 2019-09-12 08:42:33

"சிவப்புக்கிரக மனிதன்" கவிதை நூல் வெளியீட்டு விழா

மருதமுனை நிஸா

கவிஞர் காத்தநகர் மொகைதீன் ஸாலி எழுதிய "சிவப்புக்கிரக மனிதன்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் ஒத்தாப்பு கலை இலக்கிய பெருவெளி ஏற்பாட்டில் எதிர்வரும் (15.09.2019) ஞாயிறன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கவிமணி அல்-ஹாஜ் எம்.எச்.எம்.புகாரி தலைமையில் நடைபெறவுள்ளது.

முதற்பிரதியை தேசமான்ய அல்-ஹாஜ் ஏ.எல்.மீராசாஹிபு , தேசபந்து அல்-ஹாஜ் கே.எம்.எம்.கலீல் அவர்கள் பெறவுள்ளனர்.
பிரதம அதிதிகளாக, அல்-ஹாஜ் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ,
முதன்மை அதிதிகளாக, காத்தான்குடி பிரதேச செயலாளரான திரு.யு.உதயசிறி ,நிந்தவூர் பிரதேச செயலாளரான ரீ.எம்.எம்.அன்சார் ,
சிறப்பு அதிதிகளாக, மதனி எம்.ஏ.சி.எம் றிஸ்வான் , எம்.ஐ.எம்.ஜவாஹிர்
கௌரவ அதிதிகளாக, அல்-ஹாஜ் எம்.சி.எம்.ஏ.சத்தார்,வைத்தியர் திரு.பீ.ஜுடி ஜெயகுமார் உட்பட அனைத்து கலைஞர்களும் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் பாடல்கள்,கலை நிகழ்வுகள், நூல் ஆய்வுரை என்பன நிகழவுள்ளன.


Our Facebook

Popular Posts