கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-09-11 20:38:48

அழிகிறது அமேசன் எரிகிறது மனம்

மருதமுனை நிஸா

எரிகிறது அமேசான்

புரிகிறதா உமக்கு?

உரிகி அழுது 

கருகிக்கொண்டிருக்கிறது அமேசான்!..

அதிய உயிர்கள்....!

ஆச்சரிய விடயங்கள்...!

அற்புத படைப்புகள்...!

அழகான காட்சிகள்...! 

எல்லாமே அழிகிறது!.. 

அநியாயமாய் போகிறது...!

இறைவன் படைப்பில்

மறைமுகமாக 

மறைக்கப்பட்ட இரகசியமாய்

வாழ்ந்து கொண்டிருக்கின்ற

அற்புத காடு அது!..

யார் செய்த சூழ்சி?

யார் வைத்த குறி?

யாருடைய வெறி?

ஊர்வன யாவும்  உயிருக்கு போராட்டம்...!

கார்மேகங்கள் கதறி அழுகிறது!...

மலைகளெலாம் 

மண்டியிட்டு நிற்கிறன்து...!

விட்டுவிடுங்கள் என்று

குமுறி அழுகின்றதே 

கேட்கவில்லையா யாருக்கும்?

நெருப்பின் கொந்தளிப்பில்

கருகி சாம்பலாகிக்கொண்ருப்பது

அமேசான் மட்டுமல்ல

அகிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நம் எதிர்காலமும்தான்...!


Our Facebook

Popular Posts