கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-03-09 15:12:51

மலர்ந்தது முஹர்ரம்

மருதமுனை நிஸா

மலரட்டும் புதியன!..

மனமெலாம் 

மகிழ்ச்சிகரமாய் திகழட்டும்!..

அழியட்டும் இனியாவது

அழுக்குகள் இன்றி

ஆரம்பிக்கட்டும் செயல்கள் 

அனைத்தும்!..

ஒழியட்டும்

ஒட்டுமொத்த ஊழலும்

ஓடி மறையட்டும்!...

திறக்கட்டும் உள்ளங்கள்

தியாகங்கள் தொடரட்டும்!...

தீயன அழியட்டும்!...

உறவுகள் பேணப்படட்டும்

உணர்வுகளை மதித்து

உண்மையாய் பழகட்டும்!..

தான் எனும் கர்வம் கலையட்டும்!..

தானாக மனம் திருந்தி நடக்கட்டும்!..

தன்னடக்கம் 

தளைக்கட்டும்!...

நல்லெண்ணம் பிறக்கட்டும்!...

நன்மைகள் அதிகரிக்கட்டும்!...

நற்பிரஜைகள் உருவாகட்டும்!..

நான் என்ற வார்த்தை நீங்கி

நாம் என்று நாமுழுக்க பொழியட்டும்!..

தேசதுரோகிகள் ஒளியட்டும்!..

தேசமே உயிரென நினைக்கட்டும்!.

தேசத்தில் நல்லாட்சி நிலவட்டும்!..

இதயங்கள் ஈரமாகி....

இனியாவது விழிக்கட்டும்

இலங்கைத்தாயை போற்றட்டும்!..

அகங்களெலாம் அழகாய் மாறட்டும்!..

முகங்களெலாம் பிரகாசமாய் மிளிரட்டும்!..

பல சுகங்களோடு

சுபீட்சமாய் அனைவரும் வாழட்டும்!..

நல்லவளி காட்டு றப்பே!...


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts