கல்வி | கல்வி | 2019-08-20 23:33:22

(சுப்றா) பரீட்சையில் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்த சோபிதாவுக்கு கௌரவம் 

நடைபெற்ற அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் அதி உயர்தரம்(சுப்றா) பரீட்சையில் அட்டாளைச்சேனை பிரதே செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளர் சேவையில் கடமையாற்றிவரும் கிருஷ்ணப்பிள்ளை சோபிதா தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர். ஏம்.ஏ.சி.எம்.நஸீல், கணக்காளர் ஏ.எல்.றிபாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.எல்.ஹூஸைனுடீன், ஏ.எம்.அஸ்லம் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.நழீல் உள்ளிட்ட காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

14வருடகாலமாக முகாமைத்துவ உதவியாளர் சேவையில் கடமையாற்றிவரும் கிருஷ்ணப்பிள்ளை சோபிதா அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இவர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட(ஏ)சித்தியைப் பெற்றவர் என்பதுடன் வெளிவாரி பட்டதாரியுமாவாா்.

இவர் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்று தான் கடமையாற்றி வரும் பிரதேச செயலகத்துக்கும், ஊருக்கம், தனது தாய் தந்தையினருக்கும் புகழையும், கீர்த்தியையும் பெற்றுத்தந்துள்ளதுடன், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பிரதேச செயலாளர் இதன் போது தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Popular Posts