கல்வி | கல்வி | 2019-04-05 00:46:50

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் 06 மாணவர்களுக்கு 9 'ஏ' தரச் சித்தி  

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் இம்முறை வெளியான கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சையில் 06 மாணவர்கள் 9 ஏ தரச் சித்தியை பெற்று பாடசாலைக்கும் மருதமுனை மண்னுக்கும் பெருமையை தேடித்தந்துள்ளளர்.

மாணவர்களான எம்.ஆர்.அஹ்னா சனா, ஆர்.பாத்திமா ஒனிஸா, எம்.யூசுப் கிசோர், எம்.எம்.ஹம்தி றீஸ், ஏ.அலீம் அஸ்ரிஜ், எம்.எம்.பரீஹ் அஹமட் ஆகியோர் 9 பாடங்களிலும் 'ஏ' தரச் சித்தியை பெற்றுள்ளனர்.

இதே வேளை 6 மாணவர்கள் 8ஏ, 1பி சித்தியை பெற்றுள்ளனர்.  கே.ஆர்.பினோ மெஹ்னஸ் என்ற மாணவி, அண்மையில் மருதமுனையில் திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரும் முன்னாள் கல்முனை மாநகர சபையின் சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான மர்ஹூம் இஸட்.ஏ.எச்.றஹ்மான் (ஐ.பி) இன் மகளாவார். தந்தையின் மரணம் நிகழ்ந்த தினத்தன்று வரலாறு பாடம் எழுதுவதற்கு பரீட்சைக்கு சமூகமளிக்கவில்லை. எனினும் ஏனைய பாடங்களுக்கு குடும்பத்தினரின் கட்டாயப்படுத்தலுக்கு மத்தியில் தோற்றி 8 பாடங்களிலும் 'ஏ' தரச் சித்தியை பெற்று சாதனை படைத்தார். இவரை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.

சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெறுவதற்கு வழிகாட்டிய அதிபர் பி.எம்.எம்.பதுறுத்தீன், பிரதி அதிபர் ஏ முஹம்மட் அன்சார், உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் அமைப்பு மற்றும் பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம் தமது நன்றிகளை தெரிவித்துள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts