கல்வி | கல்வி | 2019-04-01 00:30:50

மீண்டும் அமீரகத்தில் கால் பதித்த மாவனல்லை சாஹிரா 

-ஷம்ரான் நவாஸ் (துபாய்)-

கம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க அமீரக கிளை ஒருங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான ஒருநாள் புட்ஸால் சுற்றுப்போட்டி (Inter School Past Pupils Futsal League 2019) 23/03/2019 (வெள்ளி) அன்று அமீரகத்தில் அஜ்மான் பகுதியில், ஹாட்ரிக் அல்சோராஹ் புட்ஸால் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஒரு பாடசாலையாக மாவனல்லை ஸாஹிரா பங்கு பற்றி தொடரை கைப்பற்றிக்கொண்டது. மாவனல்லை ஸாஹிரா எதிர்கொண்ட போட்டிகளை முறையே நோக்குவமாயின், முதலில் கொழும்பு ஸாஹிரா , செயின்ட் மேரிஸ் கல்லூரியுடனான போட்டிகளில் தோல்வியை தழுவியது. பின்னர் மாத்தளை ஸாஹிரா உடனான போட்டியில் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கை பெற்று வெற்றி பெற்றது, அடுத்து டீ.பி.ஜாயா அணியினருடன் போட்டியை சமநிலை படுத்தி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது. இப்போட்டியில் இரு அணிகளும் எந்த ஒரு கோலையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன் காலிறுதி போட்டிக்கு தெரிவாகிய மாவனல்லை ஸாஹிரா கம்பளை கம்பைன் அணிக்கு எதிராக விளையாடி இரண்டுக்கு ஒன்று அடிப்படையில் மிக சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக்கொண்டது. இதில் மாவனல்லை அணியின் நட்சத்திர வீரர் அரபாத் மற்றும் அசாத் சிறப்பான கோல்களை அடித்தனர். இந்த வெற்றியின் பின்னர் மாவனல்லை ஸாஹிரா அரையிறுதிக்கு  தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது 

லாங்கன்ஸ் கம்பைன் அணியுடனான அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் கோல்களை பெறாதநிலையில் பெனால்டி முறையில் மாவனல்லை ஸாஹிரா வெற்றியை பெற்றுக்கொண்டது. இதில் மிக சிறப்பான முறையில் சகீர் மற்றும் ராசானின் கோல்கள் மூலம் மாவனல்லை ஸாஹிரா வெற்றியை தழுவி கொண்டது. இதில் எமது கோல் காப்பாளரான சமீத் சிறந்த முறையில் கோல்களை தடுத்ததன் மூலம் வெற்றியை பெற்றுக்கொள்ள வழி வகுத்தார்.

இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாவனல்லை ஸாஹிரா கம்பளை ஸாஹிராவுடன் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் கோல்களை பெறாதநிலையில் பெனால்டி முறையில் மாவனல்லை ஸாஹிரா தனக்கே உரிய பாணியில் வெற்றி கோப்பையை கைப்பற்றி தன்னை மீண்டும் ஒருமுறை நிலை நிறுத்திக்கொண்டது. இதில் சகீர், அரபாத், ராசானின் கோல்கள் மூலம் மாவனல்லை ஸாஹிரா மிக சிறப்பான முறையில் வெற்றியை தழுவி கொண்டது. எமது கோல் காப்பாளரான சமீத் அவர்களின் பங்களிப்பு இந்த போட்டியை பொறுத்தவரை மிக இன்றியமையாது என்றால் மிகையாகாது.

இந்த தொடரில் பின்வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடி சிறந்த வீரர்களுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டனர். 

சுற்றின் ஆட்ட நாயகன் : அராபத் நளீர் (மாவனல்லை ஸாஹிரா) 

இறுதி போட்டி நாயகன் : முஹம்மது சமீத் (மாவனல்லை ஸாஹிரா)

சிறந்த பந்து காப்பாளர் : முகம்மத் நபீஸ் (கம்பளை ஸாஹிரா)

சிறந்த வீரர் (தங்க பாதணி) : அப்துல்லாஹ் (லங்கன் கம்பைன் அணி)

இந்நிகழ்வில் எங்களுக்கு ஆதரவு அளித்த மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் இச்சுற்றுப் போட்டியை சிறந்த முறையில் நடத்தி சகல விதத்திலும் உதவிய நிர்வாக குழு உறுப்பினர்கள், அங்கத்தினர்கள், பங்குபற்றிய அனைத்து பாடசாலை அணிகளினதும் பழைய மாணவர்கள், மற்றும் நிதி ஆதரவு தந்து உதவிய நிறுவனங்களுக்கும் மாவனல்லை ஸாஹிரா சார்பாக மாவனல்லை ஸாஹிராவின் அமீரக கிளை பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ரிப்கான் ரவூப் அவர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய மாவனல்லை ஸாஹிராவின் அமீரக கிளை பழைய மாணவர் சங்க உப தலைவர் திரு. அக்ரம் அப்பாஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எதிர் வரும் காலங்களில் எமது பாடசாலை மேலும் பல சாதனைகளை நிகழ்த்தும் எனவும், ஆதரவு அளித்த அணைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார். 

இதுவரை கம்பளை ஸாஹிரா ஒருங்கமைப்பு செய்த மாபெரும் இரு தொடர்களான கிரிக்கெட் மற்றும் புட்ஸால் தொடர்களை மாவனல்லை ஸாஹிரா கைப்பற்றிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts