கல்வி | அபிவிருத்தி | 2019-03-03 07:02:07

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கிளை நிந்தவூரில் பைசல் காசிம் நடவடிக்கை 

[ஊடகப் பிரிவு]

தொழில் நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா [HND] பாடநெறிகளை வழங்கி வரும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அதன் கிளையை நிந்தவூரில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

சுகாதார இராஜாங்க அமமைச்சர் பைசல் காசிம் இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கே.டி.ஏ.உதயங்க ஹேமபாலவை  சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண மாணவர்களின் நலன் கருதி இந்த நிறுவனத்தின் உதவி தேவைப்படுவதாக பைசல் காசிம் அவரிடம் கூறினார்.அந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எவ்வாறான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிறுவனத்தின் கிளையை நிந்தவூரில் நிறுவி முழுக் கிழக்கு மாகாணத்துக்கும் விரிவான கல்வியை வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு பைசல் காசிம் அதன் பணிப்பாளரிடம் வேண்டுகோள்விடுத்தார்.

இராஜாங்க அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர் உதயங்க இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி

நிறுவனம் உயர் கல்வி அமைச்சின் கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts