கல்வி | கல்வி | 2019-02-13 16:44:21

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் அட்டப்பள்ளம் பிலோமினாவுக்கு தேசிய சாதனை விருது

(Arivu)

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் அட்டப்பள்ளம் பிலோமினாவுக்கு தேசிய சாதனை விருது -  விழாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு வீட்டில் வறுமை

நாடளாவிய ரீதியில் இந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆக்க திறன் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அட்டப்பள்ளத்தை சேர்ந்த சிறுமி ஜெ. பிலோமினா மகத்தான வெற்றி ஈட்டி தேசிய சாதனை புரிந்து உள்ளார்.

அட்டப்பள்ளம் விநாயகர் அறநெறி பாடசாலை மாணவியான பிலோமினா எழுதிய கட்டுரைக்காக தேசிய ஆக்க திறன் விருது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற உள்ள விழாவில் வைத்து வழங்கப்படுகின்றது. 

அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தின் தரம் 02 மாணவியான இவர் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரின் பெற்றோர் கூலி தொழிலாளிகள் ஆவர். கொழும்பில் இடம்பெற உள்ள விருது வழங்கல் விழாவுக்கு நேரில் சென்று பங்கேற்க முடியாத நிலையில் இவரின் குடும்ப சூழல் காணப்படுகின்றது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts