பிராந்தியம் | மருத்துவம் | 2023-10-25 00:05:02

கல்முனை கல்வி கலாசார மேம்பாட்டு தாபனத்தின் இரண்டாவது இரத்ததான முகாம்

(கல்முனை நிருபர் நிப்றாஸ் மன்சூர்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை கல்வி கலாசார மேம்பாட்டு தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் கல்முனை பள்ளி ஒழுங்கையில் அமைந்துள்ள எக்டோ (ECDO) நூலகத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்றது.

கல்முனை கல்வி கலாசார மேம்பாட்டு தாபனத்தின் தலைவர் எஸ்.எல்.எம் றிஸாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி, கெளரவ அதிதியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மானின் வழிகாட்டலில் வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பாளர் வைத்தியர் சி.மருதராஜன், வைத்தியசாலை அதிகாரிகளும், ஊழியர்களும், தாபனத்தின் அங்கத்தவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த இரத்ததான முகாமில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் தாபனத்தின் அங்கத்தவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து இரத்ததானம் வழங்கினர். மேலும் எக்டோ தாபனமானது சுமார் இருபது வருடத்திற்கும் மேலாக கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts