பிராந்தியம் | அரசியல் | 2019-11-29 09:16:25

கோழைத்தனமான தாக்குத்தல் மூலம் அமைச்சர் ரிசாத் பதீயுத்தினின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது . - கல்முனை மாநகர சபையில் உறுப்பினர் எம்.ஐ .எம்.அப்துல் மனாப் கண்டனம்

(​​​​​எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை மாநகர சபையின் 20 ஆவது சபை அமர்வு இன்று (28) பிற்பகல்   கல்முனை நகர மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப்  தலைமையில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்
எம்.ஐ . அப்துல் மனாப்  சபையில் உரையாற்றும் போது

அண்மையில் அமைச்சர் ரிசாத் பதீயுத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து 

தனது பலத்த கண்டனத்தை தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

அண்மையில் எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதீயுத்தின் பயணித்த வாகனத் தொடரிணி மீது புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.இவ் வகையான தாக்குதல் மூலம் அவரின் குரலையோ வளர்ச்சியையோ யாரும் அடக்க முடியாது என்ற செய்தியை இவ் சபையில் தெரிவிக்கின்றேன் .

மேலும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் இடையூறுகள் அதிகரித்து வருகின்றன. தற்போது எமது பகுதியில் மழை பெய்து வருகின்றது. வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால். வீதியில் பிரயாணம் மேற்கொள்ளும் சாரதிகள் விபத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கோள்வதுடன் தற்போது நிலவும் மழையடனான காலநிலையினால் கல்முனை பகுதியில் வடிகான்களை துப்பரவு செய்யுமாறும் வேண்டுகிறேன் என்றார்.

மேலும் இதற்கு முன்னர் சபை அமர்வுகள் மாநகரசபை அமைந்துள்ள இடத்தில் இடம்பெற்றதுடன் இன்றைய 20வது சபை அமர்வு கல்முனை நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
தற்போது உள்ள பழைய மாநகர சபை கட்டிடமானது புதிதாக மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts