பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-08-02 18:15:44

பாண்டிருப்பில் இலவச வைத்திய முகாம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ் )

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை இணைந்து ஏற்பாடு செய்த இலவச வைத்திய முகாம் நேற்று (01.08.2019) பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் திட்டமிடல் பணிப்பாளர் பி.ராஜகுலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சமூகசேவைகள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெற்ற இந்த இலவச வைத்திய முகாமில் பொதுமக்களை அதிகம் பாதித்துவருகின்ற நீரழிவு, அதி உயர் குருதி அழுத்தம், உயர் கொழுப்பு, இருதய நோய், உடற் பருமன் போன்ற தொற்றா நோய்கள் தொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தோற்றா நோயில் இருந்து பாதுகாப்பு பெறுவதன் அவசியம் பற்றியும் வைத்தியர்கள் பொதுமக்களுக்கு விளக்ககமளித்தனர்.

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ், டாக்டர் எஸ்.திருமால், டாக்டர் கே.லுபோஜினி ஆகியேரர் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டனர். இதன் போது தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம்.முர்சித், எஸ்.சிவகுமார், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.சுபாஸ்கரன், எம்.இஸட்.எம்.றியாஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts