✍️முஜீப் சத்தார்
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் எற்பாட்டில் ஸ்கை தமிழ் உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகப் பிரபலங்கள் ஒன்றிணைந்த “Media Networking Gala” நிகழ்வு நேற்று (03) வியாழக்கிழமை இரவு நிந்தவூர் Relax Garden இல் சிறப்பாக நடைபெற்றது.
சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் தங்களது உறவுகளுடன் ஒன்றிணைந்து பங்கேற்ற இந்நிகழ்வு, ஊடகத்துறையினரிடையே நட்பையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு சிறப்பான சந்திப்பாக அமைந்தது.
நிகழ்வின் போது, அம்பாறை மாவட்டத்தில் செயற்படும் பல்வேறு ஊடக அமைப்புகளின் பிரதானிகள் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினரால் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் ஸ்கை தமிழ் ஊடக அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து அரச சேவையில் பதவிகளைப் பெற்றவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியில் ஸ்கை தமிழ் குழுவினரால் ஸ்கை தமிழ் பிரதானி சகோதரர் JM பாஷித் பொன்னாடை போர்த்தி, வாழ்த்து பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஊடகத்துறையில் பணியாற்றும் சகோதரர்கள் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து தங்களது அனுபவங்களையும் நட்பையும் பகிர்ந்துகொண்ட இந்நிகழ்வு, அம்பாறை மாவட்ட ஊடகத்துறையில் ஒரு மறக்க முடியாத நினைவாக அமைந்தது.
🤝 ஊடகம் ஒன்றிணைவோம்… உறவுகளை வலுப்படுத்துவோம்…













