விளையாட்டு | விளையாட்டு | 2023-08-08 05:46:47

ஈஸ்டன் ரி-10 பிளாஸ்ட் கடின பந்து கிரிக்கெட் சமர் - சாம்பியனானது சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் வி.க!

நூருல் ஹுதா உமர்

கல்குடா "டோன் டச்" விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 32 முன்னணிக் கழகங்கள் கலந்து கொண்ட ஈஸ்டன் ரி-10 பிளாஸ்ட் கடின பந்து கிரிக்கெட் சமர் சுற்றுப் போட்டியை மிகவும் பிரமாண்டமான முறையில் நடாத்தியது. 

இப்போட்டி ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை  (06) நடை பெற்றது.  

இறுதிப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகமும் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சையில் இறங்கின. 

முதலில் துடுப்பாடிய சம்மாந்துறை அணியினர் 10 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுக்களை 

இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றன. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 09 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை 

இழந்து வெற்றி பெற்று சாம்பியனானது.

இப்போட்டியில் மிகச்சிறப்பாகத் துடுப்பாடிய முஹம்மட் றிபான் ஆட்டமிழக்காமல் 66 (26) ஓட்டங்களைப் பெற்றதுடன் 17 பந்துகளில் 51 ஓட்டங்களை மிக வேகமாகக் குவித்த

இவர் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட அதே வேளை, போட்டித் தொடர் நாயகனாகவும் சிறந்த பந்து வீச்சாளராகவும் எஸ்.எம்.சுஜான் தெரிவு செய்யப்பட்டார்.

சம்பியனான சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கான கிண்ணம் பரிசில்களை பிரதம அதிதி சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசீக் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts