விளையாட்டு | விளையாட்டு | 2023-06-19 18:15:50

மருதமுனை மீஸ்டோ(MEESDO)அமைப்பின் ரீசேட் அறிமுக நிகழ்வும்,கல்வியலாளர்கள் கௌரவிப்பும்!

மருதமுனை மீஸ்டோ(MEESDO)அமைப்பின் ரீசேட் அறிமுக நிகழ்வும்,கல்வியலாளர்கள் கௌரவிப்பும்.

-கலாபூஷணம் பி.எம்.எம்.எ.காதர்-ஏ.எல்.எம்.ஷினாஸ்

மருதமுனை மீஸ்டோ(MEESDO)அமைப்பின் டீ சேட் அறிமுக நிகழ்வும், கல்வியலாளர்கள் கௌரவிப்பும் சனிக்கிழமை மாலை(17-06-2023)மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.அமைப்பின் தலைவர் என்.ஜி.எம்.நாபியு தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.செயலாளர் பதுறுஸ்மான் பஹத்ஸமானின் நெறிப்படுத்தலில் இந்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப் பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மருதமுனை மீஸ்டோ அமைப்பின் உறுப்பினர்களுக்கு டீ சேட் அறிமுகம் செய்யப்பட்டு.வர்த்தகர்ஏ.எச்.எம்.தஸ்மீம் (முகம்மட் மென்ஸ்வெயார்) இந்த டீ சேட்டுக்கு அனுசரணை வழங்ஙியிருந்தார்.இங்கு மூத்த கல்வியலாளர் களான ஓய்வு நிலை அதிபர் ஏ.எல்.மீராமுகைதீன,ஒய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம், அல்-மனார் அதிபர் ஐ.உபைதுல்லா ஆகியோருடன் வர்த்தகர் ஏ.எச்.எம்.தஸ்மீம் ஆகியோர் “MEESDO 2023” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் 4ஜி ஹேன்ட்லூம் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பளர் பதுறுஸ்மான் பஹத்ஸமான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நால்வருக்கும் பொன்னாடை போர்த்தி அன்பளிப்புக்களை வழங்கி கௌரவித்தார்.மேலும் மரணித்த அமைப்பின் உறுப்பினர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இங்கு நடைபெற்ற விருந்துபசாரத்தை ஏ.சி.எம்.நௌசாத் ஏற்பாடு செய்திருந் தார்.ஐ.எல்.எம்..முபீன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக கடமையாhற்றினார். அமைப்பின் பொருளாளர் ஏ.எம்.றிஸா அஹமட் ஏனைய ஏற்பாடுகளைச் செய்திருந்தார். டீ சேட்டுக்கான வடிவமைப்பை அமைப்பின் ஊடக இணைப்பாளர் இஸட்.எம்.மின்ஹாஜ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எம்.ஐ.இஸ்மதீன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts