விளையாட்டு | விளையாட்டு | 2021-04-10 12:12:28

"சம்மாந்துறை பிரிமியர் லீக் " மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 10 திகதி ஆரம்பம்!

(ஐ.எல்.எம்.நாஸிம்)

இன ஐக்கியம் கழக  ஒருமைப்பாட்டினை மேம்படுத்துவதை நோக்காக கோண்டு சம்மாந்துறை வரலாற்றில் முதல் முதலாக  ஏற்பாடு செய்துள்ள "சம்மாந்துறை பிரிமியர் லீக்" மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப விழாவும், டீ சேட் அறிமுக நிகழ்வும்  நேற்று முன் தினம் (07) மாலை சம்மாந்துறை தனியார் விடுதியில்  ஏற்பாட்டுக்குழு தலைவர் ஆசிரியர் ஏ.பி.எம் அஜ்வத் தலைமையில் நடைபெற்றது.

"சம்மாந்துறை பிரிமியர் லீக்" மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விளினையடி வேங்கை, கைகாட்டி கிங்ஸ், ஹிஜ்றா ஹீரோஸ், மலையடி மார்வல்ஸ் போன்ற நான்கு அணிகளைக்கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 11 பேர் விளையாடக்கூடிய கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக இந்த  சுற்றுத்தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் போட்டியின் சம்பியன் பட்டத்தை பெரும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன்  பணப்பரிசும், நான்கு இடங்களை பெறும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட உள்ளது. இது மாத்திரமின்றி தொடர்நாயகன், ஆட்டநாயகன், சிறந்த வீரர் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

போட்டிகள் யாவும் எதிர்வரும் 10 திகதி சம்மாந்துறை பொது விளையாட்டு  மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் ஆசிரியர் ஏ.பி.எம் அஜ்வத் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts