விளையாட்டு | விளையாட்டு | 2021-02-13 13:12:49

சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு!

(பீ.எம்.றியாத்,எம்.என்.எம்.அப்ராஸ்)

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (2021)நடப்பு ஆண்டுக்கான அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளன

புதிய நிர்வாக தெரிவுக்
கூட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மாவட்ட காரியாலய கூட்ட மண்டபத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் அலியார் முபாரக் அலிநேற்று (02) தலைமையில் நடைபெற்றது.


நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் டபிள்யூ.டி.விரசிங்க அவர்களும்
கௌரவ அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால

அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாதுரீக, ,இளைஞர் விவகார அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்களான ஏ.எம்.மேனக்க,டீ.ஏ.சீ.தேவரபெரும, எஸ்.ஏ.கேசேர கசூன், எம்.டப்லியு.குமாரா, அம்பாறை மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெஸ்கோ பொது முகாமையாளர் சிறிவர்தன,அம்பாறை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் இளைஞர் சேவை அதிகாரிகள் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,இளைஞர் யுவதிகள்  ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts