🔴மருதமுனை அந்-நூரின்
இரண்டாவது ஹாபிழ்
AL HAFIL – N.M DHAKIY SALIH
🖍️அந்-நூர் நிருவாகம்

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் மேல்தளத்தில் பகுதி நேரமாக இயங்கிவரும் எமது அந்நூர் கல்வி நிறுவகத்தில் அல் குர்ஆன் மனனப் பிரிவானது இன்றைய தினம் இரண்டாவது ஹாபிழை உருவாக்கி உள்ளது.
பல தடைகள்,கஷ்டங்கள், தியாகங்கள், முயற்சிகளைத் தாண்டி…
பிரத்தியேக வகுப்பு நேரங்களைக் கூட குர்ஆனுக்காக வேண்டி ஒதுக்கி,அந்நூரின் இரண்டாவது ஹாபிழாக மகுடம் சூடினார்.
அல்-ஹாபிழ் N.M DHAKIY SALIH.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் உதவி அதிபர் M.S NIHAL MOHAMED மற்றும் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஆசிரியை A.F JINANA
ஆகியோரின் செல்வப் புதல்வன் அல்-ஹாபிழ் N.M DHAKIY SALIH
2022ம் ஆண்டு ஒரு மாணவனாக அந்நூர் கல்வி நிறுவகத்தில் இணைந்து கொண்டார்.
இம் மாணவன் மருதமுனை அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்பதோடு தான் ஒரு ஹாபிழ் ஆக வேண்டும் என்ற ஆசையோடு பாட விடயங்களில் நேர்த்தியான அழகான ஓதலுடன் தஜ்வீத் முறைப்படி தனது உஸ்தாத்
அஷ்- ஷெய்க் நுஸ்கி (ஸாபிதி) அவர்களிடம் பாடங்களை கொடுத்தது மட்டுமின்றி தனது பெற்றோரின் அயராத உழைப்பு மற்றும் ஊக்குவிப்பினால் இன்று 2025-12-22 ம் திகதி உஸ்தாத்மார்கள் மாணவர்கள் மற்றும் தனது தந்தை முன்னிலையில் இறுதி சில வசனங்களை ஓதி 3 ½ வருடங்களுக்குள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து முடித்துள்ளார்.
குறிப்பாக ஓய்வு நேரங்கள், விடுமுறை நாட்கள் என்று பாராமல் உஸ்தாதிடம் பாடம் கொடுத்து வந்தமையும் பாராட்டத்தக்க விடயமாகும்.
அவரின் குர்ஆனிய சேவை கியாமத் வரை நீள அல்லாஹ் அருள் புரிவானாக.
மத்ரஸா நிர்வாகம் உஸ்தாத்மார்கள் மாணவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹ் அவரின் உள்ளத்தில் கியாமத் வரை அல் குர்ஆனை பாதுகாப்பானாக.