உள்நாடு | அரசியல் | 2023-10-27 10:06:52

மருதமுனையில் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் பங்கு பற்றுதலுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் உள்ள வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு   மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கொத்தன் மண்டபத்தில் (25) நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹூதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு காற்று உதாரணங்களை வழங்கி வைத்தார்.
 

இலங்கை கல்வி அமைச்சுக்கு சீன அரசாங்கத்தின் உதவியுடன் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய 270 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்முனை வலய கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.றியால், ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் பி.எம்.எம்.ஜெஃபர், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.றனூஸ் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts