வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-04-09 05:13:04

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வும்,வருடாந்த பொதுக் கூட்டமும்!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனைக்கான வளைகுடா அமையத்தின் (GFK)ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனைச் சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வு மற்றும் வருடாந்த பொதுக் கூட்டமும்,புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் கத்தார் ஸ்டபர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையில் (07) வெள்ளிக்கிழமை
நடைபெற்றது.


இந்நிகழ்வின் ஆரம்பமாக அல்ஹாபிழ் எம்.எம்.ஏ.அபாஜ் மன்சூர்(பாகவி) கிராத் ஓதி ஆரம்பித்து வைத்தார். 

இதனையடுத்து கல்முனைக்கான வளைகுடா அமையத்தின் தலைவர் எம்.எல்.எம்.ரெளசூல் இலாஹி வரவேற்பு உரை நிகழ்த்தினார்.இதில் கல்முனைக்கான வளைகுடா அமையமானது கல்முனை பிரதேச சமூக நலன் உதவியினை மேற்கொள்ளும் முகமாகவும் மற்றும் கத்தாரில் வசிக்கும் கல்முனையயைச் சேர்ந்தவர்களுக்கான உதவி வழிகாட்டல் மேம்பாடு உட்பட இதர நலன் சார் உதவியினை கருதி 2015 ஆரம்பிக்கப்பட்டது என தனது வரவேற்பு உரையில் தெரிவித்தார்.

பின்னர் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவினை மெளலவி எஸ். எம். புகாரி ( மஜீதி) மேற்கொண்டார்
நிகழ்வின் தொடர்ச்சியாக அல்ஹாபிழ் எம்.எம்.ஏ.அபாஜ் மன்சூர்(பாகவி) அவர்களினால் துஆ பிராத்தனை இடம்பெற்றது.

மேலும் கல்முனைக்கான வளைகுடா அமையத் தினால் கல்முனை பிரதேசத்தில் ஆரம்ப காலம் தொடக்கம் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் சேவைகள் தொடர்பில் முன்னாள் தலைவர் எஸ்.எல்.அன்வர் கருத்துரைத்தார்,இதில் வாழ்வாதார உதவிகள்,பாடசாலை மாணவர்களின் நலன் கருதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு,மாணவர்களுக்கான கல்வி புலமைபரிசில்,சுய தொழில்வழிகாட்டல்,
கொரோனா தொற்று காலப்பகுதியில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு தேவையான வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு,மேலும் பல சமூக நலன் உதவி திட்டங்கள் கல்முனைக்கான வளைகுடா அமையத்தின் கத்தாரில் வசிக்கும் கல்முனைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்புடன் இடம் பெற்றதாக எஸ்.எல்.அன்வர் தெரிவித்தார்.

பின்னர் வருடாந்த பொது கூட்டத்தினையடுத்து  புதிய நிர்வாக குழு உறு்பினர்கள் தெரிவுக்காக கலந்து கொண்டவர்கள் அனைவர் மத்தியில் பகிரங்க அழைப்பின் மூலம் தன்னார்வமாக சிலர் 
தாமாக முன் வந்ததுடன் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு ஏகமனதாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் விசேடமாக நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இறுதியாக நன்றியுரையினை அமையத்தின் செயலாளர் எம்.எப். ஏ.ஜே.
ஜெஸ்னியினால் நிகழ்த்தப்பட்டது.

கத்தார் வாழ் கல்முனைச் சேர்ந்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து இதன் போது கொண்டனர்

இவ்வாறான ஒன்றுகூட லை சிறப்பான முறையில் மேற்க்கொண்ட ஏற்பாட்டு குழுவினருக்கு  குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட கல்முனை கத்தாரில் வசிக்கும் கல்முனைச் சேர்ந்தவர்கள் தமது நன்றியினை தெரிவித்தனர்.

நிகழ்ச்சித் தொகுப்பினை அறிவிப்பாளர்களான முனபர் ஏ.சி.முனவ்வர்,ஏ.பி.எம்.ரினோஸ் ஆகியோர் மேற்கொண்டனர்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts