உள்நாடு | அரசியல் | 2020-09-06 14:11:39

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவுக்கு அம்பாறை மாவட்ட சர்வமத ஆலயங்களில் விசேட பிராத்தனைகள்.

(ஹுதா உமர்)

தேசிய காங்கிரசின் சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் குதிரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை பாராட்டி வரவேற்கும் நிகழ்வும் துஆ பிராத்தனையும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளியில் ஆரம்பித்த துஆ பிராத்தணை நிகழ்வுகள் பின்னர் சாய்ந்தமருது அக்பர் ஜும்மா பள்ளிவாசல், கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா, மருதமுனை அந்நூர் ஜும்மா பள்ளிவாசல், நற்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசல், கல்முனை முஹையத்தீன் ஜும்மா பள்ளிவாசல், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல், பாலமுனை ஜும்மா பள்ளிவாசல், ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல், அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் தொடர்ந்தும் நடைபெற்றது.

சனிக்கிழமை தொடராக நடைபெற்ற ஆராதனைகள் வரிப்பத்தான்சேனை, இறக்காமம்,அக்கரைப்பற்று பிரதேசங்கலிலுள்ள பள்ளிவாசல்கள், கோயில்கள், விகாரைகளில் நடைபெற்றது. மேலும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கு ஆசி வேண்டி அக்கரைப்பற்று மஹ்ரத்துல் ஹாதிரிய்யா ஹல்லஜ் மக்காம் ஜும்மா பள்ளிவாசலில் அவரின் ஆத்மீக தந்தை   அஸ்ஸெயிக் அசெய்யித் கலிபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் ஏ மஜீத்  (காதிரி, ஜிஸ்தி, றிபாயி) அவர்களின் தலைமையில் பிராத்தனை நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவர் டாக்டர் ஏ.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அஹமட் சக்கி அதாஉல்லா, தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம். ஷியா, தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் யு.எல்.என். ஹுதா, கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தேசிய காங்கிரசின் வேட்பாளர்களான ஏ.எல்.எம்.றிபாஸ், ஏ.எல்.எம். சலீம், கே.எல்.சமீம், எம்.எஸ்.எம்.அன்ஸார், றிசாத் ஷரிஃப், எஸ்.எல்.எம். பழீல், மர்ஸூம் மௌலானா, தேசிய இணைப்பாளர் எஸ்.எம். ஷபீஸ், தேசிய தொழிலுறவுகள் செயலாளர் ஏ.சி.எம். நிஸார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts