உள்நாடு | அரசியல் | 2020-03-24 13:47:50

கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக்கூடியது என்பதனை இலங்கை வைத்தியர்கள் நிரூபித்துள்ளனர்-சீனா பாராட்டு

இலங்கையின் மருத்துவர்கள் தமது துறைசார் நிபுணத்துவத் திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக்கூடிய நோய் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் என்று சீனா பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

இலங்கையில் முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாப்பயண வழிகாட்டி முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிய செய்தியை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

இலங்கை மருத்துவர்கள் குழாம் தமது துறைசார் நிபுணத்துவத் திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக் கூடியதே என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள் என தெரிவித்த சீனத் தூதரகம்

குறித்த மருத்துவக் குழாமுக்கு எமது பாராட்டுக்களையும், குணமடைந்த சுற்றுலாப் பயண வழிகாட்டிக்கு வாழ்த்துக்களையும் கூறுகிறோம் என தெரிவித்துள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts