உள்நாடு | சமூக வாழ்வு | 2020-03-21 10:32:59

மாலை 6.00 மணிமுதல் நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு - பொலிஸ் அறிக்கை

நாடுதழுவிய ரீதியில் இன்று மாலை 6.00 மணிக்கு அமுல்ப்படுத்தப்படவுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

நாடு முழுவதிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்ப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு

கொவிட் 19 அல்லது புதிய வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் அல்லது நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகளை மீறிய வகையில் செயற்படுவதை தடுப்பதற்காக 2020.03.20 அன்று 18.00 மணி தொடக்கம் 2020.03.23 திகதி அன்று 06.00 மணி வரையில் நாடு முழுவதிலுமான அனைத்து பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் தங்கியிருக்க வேண்டும்.

அவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தும் காலப்பகுதியில் இந்த பிரதேசங்களில் அத்தியாவசிய சேவை மற்றும் ஊடக சேவைகளுக்காக மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன் இவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும்.

இதேபோன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லும் விமான பயணிகள் விமான பயணச் சீட்டை ஊரடங்கு அனுமதிப்பதிரமாக பயன்படுத்த முடியும்.

சி.டி.விக்கிரமரத்ன
பதில் பொலிஸ்மா அதிபர்
2020.03.20


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts