உள்நாடு | சமூக வாழ்வு | 2020-03-20 17:50:37

கல்முனையில் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 97 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் - பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்

ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் இன்று(20) வரை வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 97 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எமது செய்திச் சேவைக்கு இன்று (20) தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது, எமது பிரதேச செயலகத்தில் விசேட கொரோனா தடுப்பு மத்திய நிலையத்தை ஸ்தாபித்து 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்தும் உடனுக்குடன் காலை 10.00 மணி அதேபோன்று பிற்பகல் 3.00 மணி ஆகிய நேரங்களில் தகவல்களை சுகாதார பணிப்பாளர் அலுவலகம், பொலிஸார் மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வருகின்றோம். இதற்கென பிரதேசத்தின் கிராம சேவையாளர் பிரிவுகளில் பணியாற்றுகின்ற கிராம சேவை அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
இதற்கு மேலதிகமாக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனர்த்த நிவாரன சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதம முகாமையாளர்கள் உட்பட பல உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களை முடிந்தளவு மாநகர சபை, சுகாதார பிரிவினர் மற்றும் முப்படைகளின் ஒத்துளைப்போது தடுத்திருக்கிறோம். கல்முனை பிரதான சந்தையையும் 3 தினங்களுக்கு மூடியிருக்கிறோம்.
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குள் கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் இன்று(20) வரை வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 97 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்கள் பற்றிய தகவல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளோம்.
எதிர்காலத்தில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் மாவட்ட செயகத்தினால் வழங்கப்படுகின்ற சுற்று நிருபங்கள் அறிவுறுத்தல்களுக்கமைய எமது அதிகாரிகள் கடமையாற்ற தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts