உள்நாடு | சமூக வாழ்வு | 2020-03-20 12:08:33

கல்முனை மாநகரம  இரண்டாவது நாளாகவும் இன்று  (20) ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை மாநகர சபையின் பிரதான பொதுச்சந்தை உட்பட அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் இன்று  (20.03.2020) ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன. இதனால் கல்முனை பிரதான நகரில் பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டன. எனினும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய அத்தியவசிய சேவைகளை வழங்கும் காரியாலயங்கள் திறக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகள் நடைபெற்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் பொது மக்களின் நலன்களையும் கவனத்தில் கொண்டு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்திற்கமைவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்முனை பிரதான தபால் அலுவலகம், கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல அலுவலகங்கள் மூடப்பட்டு காணப்பட்டதுடன் குறித்த பிரதேசங்களில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப்போய் கிடந்ததையும் காணக்கூடியதாக இருந்தது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts