உள்நாடு | அரசியல் | 1970-01-01 05:30:00

வெற்றி அல்லது வீரசுவார்க்கம்.-நஸீர் ஹாஜி

18.10.2019ம் திகதி வெள்ளி பிற்பகல் மருதமுனையில் பேசிய SLMC தலைவரும், UNP அமைப்பாளரும், TNA ஆதரவாளருமான ஹகிம் அவர்கள் கல்முனை பிரச்சினையை தீர்ப்பதற்கு 50 வீதம் இருதரப்பும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார். 

இவரது பேச்சிலிருந்து இவர் கல்முனையின் வரலாறு பற்றி எதுவும் தெரியாமல் பேசுகிறார் என்பது தெழிவாகின்றது.

கல்முனையின் அங்கிகரிக்கப்பட்ட பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை ஆயுதமுனையில் சட்டவிரோதமாக களவாடிச்சென்றறு சட்டவிரோத செயலகம் நடாத்துபவர்களுக்கு சட்டபூர்வமான நிர்வாக பகுதியை 50 வீதம் பிரித்து கொடுக்க ஹகீமுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?

திட்டமிட்டு களவாடிய ஒன்றை உருமையாளனுக்கு 50 வீதமும் களவாடியவனுக்கு 50 வீதமும் பங்குவைக்க முன்னாள் நீதியமைச்சர் ஹகீம் சித்தசுவாதீனமாகிவிட்டாரா?

வடகிழக்கு தமிழர்களது தாயகம் எனும் கோட்பாட்டை நிறுவுவதற்கு கல்முனை முஸ்லிம்களது பட்டினம் என்பது தடையாக இருப்பதனால் கல்முனையை துண்டாட, கல்முனையின் வர்த்தகத்தை பின்தள்ள, கல்முனையின் மீன்பிடியை துடைத்தெறிய தமிழர்கள் 1986 முதல் பகிரதப்பிரத்தனம் செய்கிறார்கள். அதற்காக - 

* கல்முனையை சுமார் 7 தடவைகள் தாக்கியளித்தார்கள்.

* மீன்பிடி முனையை தூத்து துப்பரவாக்கினார்கள்.

* சட்டபூர்வ கல்முனை பிரதேச செயலகத்தை சட்ட விரோதமாக ஆயுதமுனையில் பிரித்துச்சென்றார்கள்.

தமிழ் அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பெரும்பான்மை சமுக அரச அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் பிழையாக வழிநடாத்தி கடந்த 30 வருடங்களாக ஒரு சட்ட விரோத காரியாலயத்தை இயக்கி வருகிறார்கள்.

பெரும்பான்மை சமுக அரசியல் வாதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும் இந்த சட்ட விரோத செயலகத்தின் உன்மை தன்மையை பாராளுமன்றில் எடுத்துச்சொல்லி நீதியை நிலைநாட்டாது  100% முஸ்லிம் வாக்குகளால் தெரிவான SLMC தலைவரும், பிரதிநிதிகளும் UNP க்கும், TNA க்கும் வால்பிடித்துத்திரிந்து, அஷரப் எனும் ஆழுமையை கொன்றதன் மூலம் தனது நப்ஷி கேட்கின்றது என்று  தலைமை பதவியை அடைந்ததற்கு கல்மு னையை கூறுபோட்டு தலைவனை கொண்ற தமிழனுக்கு ஹகீம் நன்றின்க்கடன் செலுத்த நினைப்பது எந்தவகையில் நியாயமாகும்.

ஹகீமே!
உனது இந்த சுத்து மாத்து தனத்தைம், ஹரீசின் கையாலாகா தனத்தையும் முன்கூட்டி விளங்கியதனால்த்தான் நான் கல்முனையின் சட்டவிரோத செயலகத்துக் கெதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். இன்னும் இரண்டு வழக்குகள் 

01. கல்முனை மாநகர, பிரதேச செயலக எல்லை விடயமாகவும்,

02. கணக்காளர் ஆளணி அனுமதித்து அப்பாவி தமிழர்களை ஏமாற்றி அவர்களை வெடில் கொழுத்தவைத்து கல்முனையில் இனமுறுகலை உருவாக்க காரணமாக அமைந்த சட்டவிரோத செயலகத்திற்கு கணக்காளர் நியமனம் விடயமாகவும்  தாக்கல் செய்ய உள்ளேன்.

கல்முனை தாளவட்டானால் ஆங்கிலயர்களால் நிர்ணயம் செய்யப்பட்டு எம்.எஸ்.காரிப்பர் முதல் எமது மூதாதையர்களால் கட்டிக்காக்கப்பட்ட கல்முனையை அல்லாஹ் உதவியால் என் உயிரைக் கொடுத்தாகுதல் நானும் என்னை விளங்கிய உறவுகளும் சேர்ந்து பாதுகாப்போம்.

ஹகீமே! 
கல்முனை பட்டினத்தின் எல்லையில் ஒரு அங்குலம்தானும் பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

சொந்த ஊர் எந்த ஊர் என்று தெரியாத பரதேசியே! எங்கள் பரம்பரை வாழ்ந்த, வாழவேண்டிய, நாங்கள் வாழுகீன்ற முஸ்லிம்களின் முக வெற்றிலையான கல்முனையை கூறுபோட்டு TNAயை வால்பிடிக்கும் உன் துரோகத்தனதை நாங்கள் ஒருபோதும் அனுமதியோம். அவ்வாறு நீ செய்வாதாயின் எனது ஜானாஸாவின் மீது நின்றுதான் உன்னால் செய்ய முடியும்.

வெற்றி அல்லது வீரசுவர்க்கம்.

சட்டம் அதன் வேலையை செய்யும்.

ஹாஜி நஸீர்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts