உள்நாடு | கல்வி | 2019-09-11 01:05:29

அக்கறைப்பற்று ஆயிஷா பெண்கள் கல்லூரியில் கற்றல் வள நிலையம், தொழிநுட்ட கட்டிடத் தொகுதியினை : நஸீர் எம்.பி திறந்து வைத்தார்.

ஊடகப்பிரிவு

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அக்கறைப்பற்று கல்வி வலயத்திற்குற்பட்ட அக்கறைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம், தொழிநுட்ப கட்டிடத்தொகுதியின் கட்டிட திறப்பு விழா நிகழ்வு நேற்று (9) திங்கள்கிழமை அதிபர் கல்லூரி நஜீமா ஹாருடீன் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒருங்கிணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் அக்கறைப்பற்று வலையக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.கலிலூர் றஹ்மான்,அக்கறைப்பற்று மாநகர சபையின் உறுப்பினர் பாஹிம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான
டீ ஆப்தின்,எம்.எஸ்.ஏ.உவைஸ்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் யூ.எல்.வாகிட், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுசண தொடர்பு அதிகாரி எம்.ஐ.நயீம் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts